தியான்ஜின், 01 செப்டம்பர் (பெர்னாமா) - சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்கள் அல்ல, மாறாக அவை ஒத்துழைப்புப் பங்காளிகள் என்று சீன அதிபர் ஸி ஜின்பெங் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளும் அச்சுறுத்தல்களைப் பரிமாறிகொள்ளாமல் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் நிலையான மற்றும் நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும் என்று ஸி ஜின்பெங் கூறினார்.
இந்த ஆண்டுடன் சீனா - இந்தியா அரச தந்திர உறவுகள் 75-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், பன்முகத்தன்மையை நிலைநிறுத்தி ஆசியாவிலும் உலக அளவிலும் அமைதி மற்றும் செழிப்புக்கு உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஸி சந்திப்பு நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
மேலும், இருதரப்பு வர்த்தக உறவை விரிவுபடுத்தவும் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கவும் முடிவு எட்டப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)