BREAKING NEWS   Paris route represents Malaysia Airlines’ 68th destination and will be served by A350-900 aircraft - Capt Izham | 
 

150CC மற்றும் அதற்கு மேற்பட்ட இயந்தரங்களைக் கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்கள் ABS-சை பொருத்துவது கட்டாயமாகிறது

02/09/2024 06:31 PM

புத்ராஜெயா, 02 செப்டம்பர் (பெர்னாமா) --  2025-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி 150cc அதற்கு மேற்பட்ட இயந்தரங்களைக் கொண்ட அனைத்து புதிய மோட்டார்சைக்கிள்கள் ANTI-LOCK BRAKING SYSTEM, ABS எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.

இந்த ABS-சின் வழி விபத்திற்கான ஆபத்தை 31 விழுக்காடு வரை குறைக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம், WHO-வின் அறிக்கை காட்டுவதாக துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு மற்றும் நெரிசல் குறித்த அமைச்சரவைச் செயற்குழு தலைவருமான அஹ்மட் சாஹிட், மலேசிய மோட்டார்சைக்கிள் மதிப்பீட்டு திட்டம் அல்லது MyMAP-இன் நோக்கத்தை ஆசியான் வட்டாரத்திற்கும் அதைத் தொடர்ந்து ஆசியாவிற்கும் விரிவுப்படுத்த பரிந்துரைத்துள்ளார்.

இன்று, புத்ராஜெயாவில் 2024ஆம் ஆண்டு ஆசிய சாலை பாதுகாப்பு மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)