பொது

இவ்வாண்டு ஜூன் மாதம் வரை வேலை தொடர்பாக 41,278 விபத்துக்கள்

02/09/2024 08:28 PM

புத்ராஜெயா, 02 செப்டம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜூன் மாதம் வரை வேலை தொடர்பாக 41,278 விபத்துக்களை சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோ பதிவு செய்துள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

அவற்றில், 52.1 விழுக்காடு அல்லது 21,503 விபத்துகள் தொழில்துறை தொடர்பானவையாகும்.

அதேவேளையில், 19,770 சம்பவங்கள் பயணத்தை உட்படுத்தியதாகும் என்று அவர் கூறினார்.

"515 மரண விபத்துகளாகும். குறிப்பாக, 31.7 விழுக்காடு அல்லது 163 மரணங்கள் தொழில்துறை விபத்துகள் தொடர்புடையவை. 68.3 விழுக்காடு அல்லது 352 விபத்துகள் பயணம் தொடர்புடையவை," என்றார் ஸ்டீவன் சிம்.

இன்று ஆசிய சாலை பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டில், பெர்கேசோவில் வேலை பேரிடர் திட்டத்தின் கீழ் விபத்துக்களினால் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையின் மதிப்பு 139 கோடி ரிங்கிட்டாகும்.

இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 71 கோடியே 80 லட்சம் ரிங்கிட் வரை இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)