உலகம்

நான்கு நாட்களில் வியட்னாமில் 257 சாலை விபத்துகள்;  124 பேர் பலி

04/09/2024 07:34 PM

ஹனோய், 04 செப்டம்பர் (பெர்னாமா) --  ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதிக்கு வியட்னாமில் 257 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விபத்துகளில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 193 பேர் காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக அந்நாட்டின் சாலைப் பாதுகாப்பு செயற்குழு தெரிவித்திருப்பதாக ஸின்ஹுவா கூறியது.

எனினும் கடந்த விடுமுறையுடன் ஒப்பிடுகையில் இம்முறை 9.82 விழுக்காடு விபத்து பதிவு குறைந்துள்ளதாகக் கூறிய அத்தரவுத் தளம், ஆனால் காயமுற்றவர்களின் எண்ணிக்கை 2.66 விழுக்காடு உயர்ந்திருப்பதாக தெரிவித்து.

சாலைகளில் ஏராளமாக நிகழும் விபத்துகளை உட்படுத்தி 123 பேர் பலியாகி இருப்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 25,894 சம்பவங்கள் அதிகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)