பொது

தென்கிழக்காசியாவில் ஊடக நிறுவனத்திற்கு இடையில் முழுமையான கட்டமைப்பை உருவாக்க வலியுறுத்து

06/09/2024 07:04 PM

பெட்டாலிங் ஜெயா, 06 செப்டம்பர் (பெர்னாமா) -- தென்கிழக்கு ஆசியா வட்டாரத்தில், ஊடக நிறுவனத்திற்கு இடையில் முழுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டாலும், ஆசியான் நாடுகள் மேலும் நெருக்கமாக இணைவதற்கு அது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

''அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் பதவிக்கு முன், மலேசியா தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் இருந்து ஊடக நிறுவனங்களைத் திரட்டி, மேலும் நெருக்கமாக ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். அடுத்த ஆண்டு தென்கிழக்கு ஆசியப் வட்டாரத்தில் இருந்து ஊடக நிறுவனங்களிடையே மிகவும் ஒருங்கிணைந்த இணைப்பை உருவாக்குவோம் என்றும் நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.

இன்று, ஆசியா நியூஸ் நெட்வோர்க்கின் 25-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஃபஹ்மி அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)