உலகம்

தாய்லாந்தின் புதிய அமைச்சரவையில் 35 அமைச்சர்கள்

07/09/2024 08:08 PM

பேங்காக், 07 செப்டம்பர் (பெர்னாமா) --  தாய்லாந்தின் புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டது.

35 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள அந்த புதிய அமைச்சரவைக்கு, பிரதமர் பேதோங் தலைமை தாங்கினார்.

தாய்லாந்து மன்னர் மஹாவஜிரா லோங்கோர்ன் முன்னிலையில் பதவியேற்று சடங்கும் நடைபெற்றது.

பூயூ தாய் எனும் கட்சியின் தலைவரான 38 வயது பெதோங்தான், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் வழி, தாய்லாந்தின் முதல் இளம் வயது பிரதமராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.

பேதோங்தான், தாய்லாந்து முன்னாள் பிரதமரான டாக்‌ஷினின் இளைய மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஶ்ரீடே தவிசின் நெறிமுறைகளை மீறியதற்காக, அப்பதவியில் இருந்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அவரை அண்மையில் பதவி நீக்கம் செய்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)