உலகம்

நெத்தன்யாஹு & காலான்ட்க்கு எதிரான கைது ஆணை

22/11/2024 05:11 PM

மாஸ்கோ, 22 நவம்பர் (பெர்னாமா) -- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்கும் எதிராக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐசிசி கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 8 தொடங்கி இவ்வாண்டு மே 20ஆம் தேதிவரை, மனிதாபிமானம் மற்றும் அவர்கள் மீதான போர் குற்றங்கள் அடிப்படையில் இந்தக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கொலை, சித்ரவதை போன்ற மனிதாபிமானம் இல்லாத செயல்களை BENJAMIN NETANYAHU-வும் யோவ் கேலன்ட்டும் இணைந்து புரிந்துள்ள நிலையில், அவர்களின் நடவடிக்கைகளுக்கு உலக அளவில் கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் தொடர்ந்து எழுகின்றன.

புறக்கணிப்பு பிரச்சாரங்கள், முதலீடுகளை மீட்பது மற்றும் பொருளாதார தடைகளை மேற்கொண்டு வரும் அனைத்துலக இயக்கங்கள், இஸ்ரேலியத் தலைவர்களை இதற்கு பொறுப்பேற்க வைப்பதில், இந்த கைது ஆணையை முக்கிய நடவடிக்கையாக கருதுகின்றனர்.

ஐசிசி-இல் 124 உறுப்பு நாடுகள் இருக்கும் நிலையில், அதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இடம்பெறவில்லை.

முக்கியமான சில நாடுகள் உத்தரவை நிறைவேற்ற உறுதியளித்துள்ள வேளையில், உறுப்பு நாடுகளின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐசிசி பிறப்பித்த கைது ஆணையை நிராகரித்துள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)