பொது

நாடு கடந்த குற்றங்களை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பு செயல்முறை அவசியம்

09/09/2024 07:05 PM

ஷாங்ஹாய், 09 செப்டம்பர் (பெர்னாமா) -- நாடு கடந்த குற்றங்களை  திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு, நாடுகளிடையே ஒருங்கிணைப்பு செயல்முறைகளை மேலும் மேம்படுத்துமாறு, உலகத் தலைவர்களுக்கு துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசு நிறுவனங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறை பங்காளிகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பதை உள்ளடக்கிய, நாடுகளுக்கு இடையிலான வலுவான ஒருங்கிணைப்பு  செயல்முறை, அது தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

இக்குற்றங்கள் பெரும்பாலும் உள்நாட்டு அமைப்புகளால் செய்யப்படுவதில்லை, மாறாக அனைத்துலக மோசடி கும்பலால் மேற்கொள்ளப்படுவதாகவும்i சாஹிட் குறிப்பிட்டுள்ளார். 

ஆகவே, இந்த பயனுள்ள ஒருங்கிணைப்பின் வழி, அனைத்து நாடுகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மிகவும் திறமையாகவும் துல்லியமாகவும் எதிர்கொள்ளும் என்று அவர் விவரித்தார்.

''நமது பதில் விரைவாக, ஒருங்கிணைந்த மற்றும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். நாம் தனித்து வேலை செய்ய முடியாது. நாம் அதற்கு அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய வேண்டும், எல்லை தாண்டிய தகவல் பகிர்வை மேம்படுத்த வேண்டும் மற்றும் இந்த குற்றவியல் தொடர்பினை எதிர்கொள்ள வலுவான கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும்'', என்றார்.

சீனாவின், ஜியாங்சு மாகாணத்தின் லியான்குவாங் சிட்டி நடைபெற்ற 2024 உலகளாவிய பொது பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில், உரையாற்றியபோது, சாஹிட்  அவ்வாறு கூறினார். 
 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)