பொது

ஹலால் சான்றிதழ் தொடர்பான அறிக்கையை தயாரிக்க டாக்டர் முஹமட் நயிமிற்கு கோரிக்கை

11/09/2024 05:55 PM

புத்ராஜெயா, 11 செப்டம்பர் (பெர்னாமா) -- அடுத்த வாரம் நடைபெறவிற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் ஹலால் சான்றிதழ் தொடர்பான அறிக்கையை தயாரிக்கும்படி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர், டத்தோ டாக்டர் முஹமட் நயில் மொக்தாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த அந்த அறிக்கையில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தைக் களைய எடுக்கப்படும் கூடுதல் நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு முடிவும் செய்யப்படுவதற்கு முன்னர், மத விவகாரங்களுக்கான அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக அமைச்சரவைக் காத்திருக்க வேண்டும் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், ஒருமைப்பாட்டு அமைச்சின் பேச்சாளருமான அவர் கூறினார்.

"அடுத்த வாரம் நடைபெறவிற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான அறிக்கையையும், அதற்கான நடவடிக்கைகளையும் தயார் செய்ய பிரதமர், மத விவகாரங்களுக்கான அமைச்சரிடம் கேட்டு கொண்டார்,'' என்றார் ஃபஹ்மி.

இதனிடையே, முக்கிய தரப்பினர்களின் கருத்துகளைச் சீர்தூக்கி பார்ப்பதுடன், எந்தவொரு புதிய கொள்கையையும் கவனமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)