பொது

ஓரிரு ஆண்டில் நாட்டின் விவசாய நிலப்பரப்பில் மாற்றம் ஏற்படும் - பிரதமர்

14/09/2024 07:18 PM

செர்டாங், 14 செப்டம்பர் (பெர்னாமா) --  இன்னும் ஓரிரு ஆண்டுகளில், நாட்டின் விவசாய செயற்பரப்பில் மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

டத்தோ ஶ்ரீ முஹமட் சாபுவின் தலைமையிலான விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு காட்டியிருக்கும் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் தமக்கு அந்நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

''தற்போது, கேபிகேஎம்-இல் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிலைத்திருந்தால், டுரியான் உட்பட பல்வேறு விவசாயத் துறைகளில், இன்னும் ஓரிரு ஆண்டுகளில், நாட்டின் விவசாய செயற்பரப்பில் மாற்றம் ஏற்படும். எனவே, அனைத்து நிறுவனங்களும், மார்டி மற்றும் மேலும் பல விவசாயம் மற்றும் மீன்பிடி துறைகளை இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்'', என்று அவர் கூறினார்.

இன்று, சிலாங்கூர் செர்டாங்கில் உள்ள மலேசிய விவசாயக் கண்காட்சி பூங்கா, MAEPS-சில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு MAHA எனப்படும் மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றும்போது பிரதமர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)