பொது

உரம் இறக்குமதியில் முறையற்ற வாணிப நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்

14/09/2024 07:21 PM

செர்டாங், 14 செப்டம்பர் (பெர்னாமா) --  நாட்டின் விவசாயத் துறையில், குறிப்பாக உரம் இறக்குமதியில் முறையற்ற வாணிப நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்.

முறையற்ற வாணிபம் மூலம் விதையை இறக்குமதி செய்யும், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேலும், இதன் தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த முடிவுகளில், நாட்டில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், சிறு தோட்டக்காரர்கள் ஆகியோருக்கான சிறந்தவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அன்வார் கூறினார்.

முதன்மை கூறாக விளங்கும் உணவு துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)