பொது

ஒதுக்கீட்டை எதிர்க்கட்சி புறக்கணித்ததா?

15/09/2024 07:13 PM

பூசா, 15 செப்டம்பர் (பெர்னாமா) -- அரசாங்கம் பரிந்துரைத்த எதிர்க்கட்சிக்கான ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, அத்தரப்பினர் நிராகரித்ததாகக் கூறப்படுவது தொடர்பில், அவர்களின் அதிகாரப்பூர்வக் கடிதத்திற்காக அரசாங்கம் காத்திருக்கிறது.

அந்நிராகரிப்பு குறித்து ஊடக அறிக்கைகள் மூலமாக மட்டுமே தாம் அறிந்து கொண்டதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

''அவர்களின் எழுத்துப்பூர்வமான கடிதத்திற்காக நான் காத்திருக்கிறேன். அக்கடிதம் கிடைதத்தும் அதை நான் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஆலோசனை மன்ற செயற்குழுவின் பார்வைக்கு கொண்டு செல்வேன். அங்குதான் இது குறித்து மேலும் பேசுவோம்,'' என்றார் அவர்.

இன்று சரவாக்கில் நடைபெற்ற Regata Pusa தொடக்கவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்க்கட்சிகள் ஏகமனதாய் நிராகரித்ததாக ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்பதோடு, மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகளையும் இது பாதிக்கக்கூடும் என்பதால் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)