விளையாட்டு

சீனப் பொது பூப்பந்து போட்டி; லீ ஸி ஜியா தோல்வி

17/09/2024 06:08 PM

சீனா, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- சீனப் பொது பூப்பந்து போட்டி...

இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டின் ஆடவர் ஒற்றையர் விளையாட்டாளர் லீ ஸி ஜியா தோல்வி கண்டார்.

2024 பேரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற ஸி ஜியா, ஜப்பானின் கோகி வதனாபேவுடன் விளையாடினார்.

இதில் 21-15, 21-2 என்ற நேரடி செட்களில், உலகின் மூன்றால் நிலையில் இருக்கும் ஸி ஜியா படுத்தோல்வி கண்டார்.

இவர்களின் ஆட்டம் 29 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், நாட்டின் கோ செ ஃபெய்-நுர் இசுடின் ரும்சானி ஜோடி அடுத்த ஆட்டத்திற்கு தேர்வாகியது.

உபசரணை நாட்டின் சென் போ யாங்-லியூ யீ ஜோடியுடன் நடைபெற்ற ஆட்டத்தில், மலேசிய விளையாட்டாளர்கள் 17-21, 21-12, 21-19 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)