உலகம்

UNGA-வின் 79ஆவது அமர்வில் பைடன் இறுதியாக உரையாற்றினார்

25/09/2024 08:05 PM

நியூ யார்க், 25 செப்டம்பர் (பெர்னாமா) -- ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுப் பேரவை, UNGA-வின் 79ஆவது அமர்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறுதியாக உரையாற்றினார்.

முக்கியமான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவும், அதிகரித்து வரும் உலக சவால்களுக்கு ஏற்ப மாற்றங்களை முன்னெடுக்கவும் அவர் UNGA-விற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

''முன்னோக்கி செல்வதற்கான நேரமிது. யு.என் போன்ற பாதுகாப்பு மன்றங்கள் அமைதி உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்வதோடு, போரையும் துன்பங்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் மீண்டும் செயல்பட வேண்டும். மேலும், மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் பரவுவதையும் நிறுத்த வேண்டும்,'' என்றார் அவர்.

21ஆம் நூற்றாண்டின் சூழ்நிலைக்கு ஏற்ப பாதுகாப்பு மன்றம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று பைடன் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)