உலகம்

இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் 51 பேர் பலி

26/09/2024 06:26 PM

பெய்ருட், 26 செப்டம்பர் (பெர்னாமா) -- இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் புதன்கிழமை 51 பேர் கொல்லப்பட்டதோடு, 223 பேர் காயமடைந்ததாக, லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக அங்கு நடந்து வரும் கலவரத்தில், சுமார் 150 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 564 பேர் உயிரிழந்ததோடு, 1,800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தோர் அந்நாட்டின் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் வேளையில், அவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கணித்துள்ளதாக ஃபிராஸ் கூறினார்.

இதனிடையே, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் உக்ரேனுக்கு உதவி வருவதால், உக்ரேன் ரஷியாவை எதிர்ப்பது என்பது, உக்ரேன் வழியாக அந்நாட்டிற்கு உதவும் அணு ஆயுதம் நேரடியாக ரஷியாவை எதிர்ப்பதாகக் கருதப்படும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

எனவே தாங்களும் தங்களின் அணு ஆயுதங்களை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற வகையில் புதின் பேசியுள்ளது மேற்கத்திய நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் அனைத்துலகப் பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக ரஷியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாட்டில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)