அரசியல்

கடப்பிதழைப் பெறுவதற்கான முகிடினின்  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

03/10/2024 07:42 PM

புத்ராஜெயா, 03 அக்டோபர் (பெர்னாமா) -- உஸ்பாகிஸ்தானுக்கு விடுமுறைக்குச் சென்று மனைவியுடன் தமது 52ஆவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக தமது அனைத்துலக கடப்பிதழை தற்காலிமாக வழங்கும்படி முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. 

விண்ணப்பத்திற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்பதால் முகிடினின் அக்கோரிக்கையை நீதிபதி அஸுரா அல்வி நிராகரித்தார். 

விடுமுறைக்குச் சென்று எந்தவொரு நாளையும் கொண்டாட விண்ணப்பதாரருக்கு வாய்ப்பு உள்ளது என்றாலும் அது வெளிநாட்டில் இல்லை என்று அவர் விவரித்தார். 

முகிடின் இன்னும் இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியும் என்பதோடு தமது பொறுப்புகளை வழக்கம்போல மேற்கொள்ளலாம் என்பதால் அவரின் விண்ணப்பத்திற்கு அனுமதி அளிப்பது நியாயமல்ல என்று நீதிமன்றம் முடிவுச் செய்தது. 

அக்டோபர் நான்கு தொடங்கி 12-ஆம் தேதி வரை உஸ்பாகிஸ்தானுக்கு விடுமுறைக்குச் செல்ல முகிடினின் கடப்பிதழை தற்காலிமாக வழங்கும்படி அவரின் வழக்கறிஞரான டத்தோ ஹிஷாம் டே போ டெய்க் விண்ணப்பித்திருந்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)