பொது

தனித்துவமான நிகழ்ச்சிகளின் வழி சுற்றுலா தலங்களை அறிமுகப்படுத்தும் முயற்சி - பெர்னாமா வரவேற்பு

05/10/2024 06:00 PM

பண்டார் ஹிலீர், 05 அக்டோபர் (பெர்னாமா) --  பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான நிகழ்ச்சிகளின் மூலம் சுற்றுலா தலங்களை அறிமுகப்படுத்துவதில் மாநில அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா வரவேற்கிறது.

2024 மலாக்காவைச் சுற்றிப் பார்க்கும் ஆண்டு பிரச்சாரத்தை முன்னிட்டு Melaka Explorace 2024 எனும் புதையல் தேடும் போட்டியின் ஏற்பாடும் அதில் அடங்கும் என்று பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி நூர்-உல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

''மற்ற மாநில அரசாங்கங்களுடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் நாங்கள் வரவேற்கிறோம். குறிப்பாக மலாக்கா மாநில அரசாங்கத்திற்கு எதிர்காலத்தில் இதே ஒத்துழைப்பைத் தொடர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்'', என்று அவர் கூறினார்.

இன்று, மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப் ராவூப் யூசோப், Melaka Explorace 2024 புதையல் தேடும் போட்டியைத் தொடக்கி வைத்தப் பின்ன்னர் நூர்-உல் அஃபிடா பெர்னாமாவிடம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பெர்னாமாவின் தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சூன் வெய் மற்றும் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)