உலகம்

மில்டன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமலா ஹாரிஸ் உதவிக்கரம் 

11/10/2024 05:16 PM

நியூயார்க், 11 அக்டோபர் (பெர்னாமா) -- மில்டன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாம் ஆதரவு வழங்குவதாக அமெரிக்க துணை அதிபர்  கமலா ஹாரிஸ் உறுதியளித்தார்.

புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  மக்களுக்கு உதவ ஆயிரக்கணக்கான அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும்  
அடிப்படை தேவைகளைப் பூர்த்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

"உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகளுடன் கைகோர்த்து மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க எங்கள் நிர்வாகம் வட்டாரம்  முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களைத் திரட்டியுள்ளது. நீங்கள் குணமடைந்து மீண்டும் இயல்பு நிலைக்குத்  திரும்ப ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என்பதை தெரிவிக்க, மாநில, உள்ளூர் அதிகாரிகளுடன், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினருடன் பேசி இருக்கின்றேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

அரிசோனாவின் Phoenix, நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது கமலா ஹாரிஸ் அவ்வாறு கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)