விளையாட்டு

டென்னிஸ் உலகில் இருந்து ஓய்வு பெறுகிறார் நடால்

12/10/2024 07:21 PM

மெட்ரிட், 12 அக்டோபர் (பெர்னாமா) -- வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிக்குப் பிறகு, விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுப் பெறப் போவதாக, ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் அறிவித்திருக்கிறார்.

22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் என டென்னிஸ் உலகில் அவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

ஓய்வு குறித்து தமது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றின் வழி நடால் அறிவித்தார்.

2008 மற்றும் 2010-ஆம் ஆண்டின் விம்பிள்டன் போட்டி வெற்றியாளரான அவர், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காயங்களால் பாதிக்கப்பட்டார்.

காயம் காரணமாகவே, 2003-ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரான்ஸ் பொது டென்னிஸ் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே ஜெர்மனி ஆட்டக்காரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் தோல்வி கண்டு வெளியேறினார்.

கடந்த இரண்டு பருவங்களில், நடால் வெறும் 23 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.

இதனிடையே, நடாலின் அறிவிப்பினால்,\ மற்றொரு டென்னிஸ் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரர் கவலை தெரிவித்திருக்கிறார்.

20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஃபெடரர், நடால் மிகவும் திறமையான ஆட்டக்காரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம், மயாமியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இவ்விரு வீரர்களும் முதன் முறையாக சந்தித்தனர்.

அப்போது நடாலுக்கு வயது 17.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)