பொது

சாலையில் ஏற்பட்ட 3 மீட்டர் ஆழமுள்ள குழியில் பள்ளி பேருந்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது

16/10/2024 08:05 PM

ஜார்ஜ் டவுன், 16 அக்டோபர் (பெர்னாமா) -- பினாங்கு, ஜார்ஜ் டவுன், பயான் லெபாஸில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் மூன்று மீட்டர் அழம் கொண்ட குழியில், இன்று காலை சுமார் 8 மணிக்கு பள்ளி பேருந்து ஒன்றின் பின்பக்க சக்கரம் சிக்கிக் கொண்டது.

நிலத்தடியில் உள்ள INDAH WATER KONSORTIUM நிறுவனத்தின் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் விளைவாக, இக்குழி ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்ப இடத்தைப் பார்வையிட்ட பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினர் ஃபஹ்மி சைனோல், சாலையில் ஏற்பட்டிருக்கும் சரிவு குறித்து தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

அப்பகுதியில் மோசமான துர்நாற்றம் சூழ்ந்துள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இதுவே முதல் முறை நடப்பதாக, அவர் கூறினார்.

இதனிடையே, காரணத்தை கண்டறிய INDAH WATER KONSORTIUM நிறுவனம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை மதிப்பாய்வு செய்யவுள்ளது.

துப்புறவுப் பணி நிறைவடையும் வரையில் அப்பகுதி போக்குவரத்திற்குத் தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)