ஆஸ்திரேலியா, ஜனவரி 21 (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி நடப்பு வெற்றியாளரான இத்தாலியின் யானிக் சின்னர் தமது பட்டத்தைத் தற்காக்கும் முயற்சியை வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
அதேபோல, மகளிர் பிரிவில் முன்னாள் வெற்றியாளரான ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தார்.
மெல்பர்ன் பார்க் அரங்கில் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று யானிக் சின்னர் பிரான்சின் ஹியூகோ கேஸ்தன் உடன் களம் கண்டார்.
அதில் 6-2, 6-1 என்று மிக எளிதில் இரு செட்களைக் கைப்பற்றி வெற்றிக் கண்டார்.
டென்னிஸ் அரங்கில் கவனம் ஈர்க்கும் வகையில் நுழைந்த நவோமி ஒசாகா 6-3, 3-6, 6-4 எனும் நிலையில் குரோஷியாவின் அன்டோனியா ருஸிக்கை வீழ்த்தினார்.
இதனிடையே தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 6-0, 7-5 எனும் நேரடி செட்களில் பிரிட்டனின் கேட்டி போல்டரைத் தோற்கடித்தார்.
கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்சிபாசும் முதல் சுற்று ஆட்டத்தில் 4-6, 6-3, 6-2, 6-2 என்ற புள்ளிகளில் வெற்றிப் பெற்ற அடுத்த சுற்றில் கால் வைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)