பொது

கோலாலம்பூர் உணவு விடுதிகளில் பாலியல் நடவடிக்கைகள் கண்டுபிடிப்பு

17/10/2024 05:18 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- கோலாலம்பூர் ஜாலான் புடு மற்றும் ஜாலான் லோக் இயூவைச் சுற்றியுள்ள உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் விபச்சார நடவடிக்கைகளுக்கான முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கூட்டரசு பிரதேச துறை நிறுவிய KL Strike Force குழு அதனை அடையாளம் கண்டுள்ளதாக, கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

"இந்த விவகாரத்தில், உள்ளூர் மக்கள் 'விழிப்புணர்வு மிக்கவர்களாக' இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டதோடு, இதுபோன்ற செயலை Adu@KL 2.0 அல்லது சமூக வலைத்தளத்தில் #KLStrikeForce-ஐ பயன்படுத்தி கேஎல் ஸ்டிரைக் ஃபோர்ஸின் உறுப்பினராக உள்ள நிறுவனத்திடம் புகாரளிக்கலாம், " என்றார் அவர்.

மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது,  KL Strike Force தொடங்கப்பட்ட பின்னரும் விபச்சார நடவடிக்கை அந்நிய நாட்டவர்களுக்கு இடையிலான சண்டை, அந்நிய நாட்டு வியாபாரிகள் அதிகரிப்பு ஆகியப் பிரச்சனைகள் இன்னும் குறையாதது குறித்து வங்சாமாஜு நாடாளுமன்ற உறுப்பினர் சாஹிர் ஹசான் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் சலிஹா அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)