முனிக், 03 நவம்பர் (பெர்னாமா) -- பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெற்றி பெற்று பயர்ன் முனிக் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
சொந்த அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பயர்ன் முனிக் யூனியன் பெர்லின் கிளப்புடன் மோதியது.
ஆட்டம் ஆரம்பித்த 15-வது நிமிடத்தில் பயர்ன் முனிக் கிளப்பிற்கு கிடைத்த பினால்டி வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோலாக்கினார்.
முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் கிங்ஸ்லி கோமன் இரண்டாவது கோலை அடித்து பயர்ன் முனிக் அணியை முன்னணி வகிக்க செய்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் யூனியன் பெர்லின் கோல் போடும் முயற்சிகளை மேற்கொண்டாலும் 51-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்து ஹாரி கேன் தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)