மிச்சிகன், 04 நவம்பர் (பெர்னாமா) -- ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஞாயிற்றுக்கிழமை மிச்சிகனில் உள்ள கிழக்கு லங்சிங்கில் நடைபெற்ற பேரணியின் போது, "பயம் மற்றும் பிரிவினையால் ஆன ஒரு தசாப்த அரசியலை மாற்றியமைப்பேன்'' சபதமிட்டார்.
நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல், "நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல்களில் ஒன்றாகும்" என்று ஹாரிஸ் விவரித்ததோடு அவர் வெள்ளை மாளிகையை அடையும் போட்டியில் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
"மிச்சிகன்,இன்னும் இரண்டு நாள்களே உள்ளன . நீங்கள் தயாரா? நீங்கள் தயாரா? நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல்களில் ஒன்று, நம்மில் வேகம் இருக்கிறது, அது நமது பக்கத்தில் உள்ளது, அதை உங்களால் உணர முடிகிறதா? நமது பிரச்சாரத்தில், அமெரிக்க மக்களின் லட்சியங்கள், விருப்பங்கள் மற்றும் கனவுகள் இருக்கிறது. ஏனென்றால் நாம் ஒன்றாக என்ன செய்ய முடியும் என்பதில் நாம் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம், '' என்றார் அவர்.
மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஹாரிஸின் வெற்றிக்குச் சற்று கடினமானது.
2008 மற்றும் 2012ஆம் ஆண்டு தேர்தலின்போது, பராக் ஒபாமா தன்வசமாக்கினார்.
ஆனால், 2016ஆம் ஆண்டில், மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சினை டிரம்ப் வென்றார்.
இதனிடையே, 2020ஆம் ஆண்டில் ஜோ பைடன் அம்மூன்று மாநிலங்களையும் மீண்டும் ஜனநாயகக் கட்சிக்கே சொந்தமாக்கினார்.
மூன்றில் ஏதேனும் ஒன்றை இழந்தால், வடகரோலினா, ஜார்ஜியா, அரிசோனா மற்றும் நெவாடாஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றியைப் பெறுவதில் மிகுந்த அழுத்தம் கொடுக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)