பொது

சீன முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலில் அன்வார் பங்கேற்றார்

06/11/2024 05:48 PM

ஷங்ஹாய், 06 நவம்பர் (பெர்னாமா) --   ஷங்ஹாய்க்கு மூன்று நாட்கள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இறுதி நாளான இன்று, Khazanah Nasional நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் சீன முதலீட்டாளர்கள் உடனான கலந்துரையாடலில் பங்கேற்றார்.

கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் Chengwei Capital மற்றும் NRL Capital ஆகிய முதலீட்டு நிறுவனங்களும் இதில் அடங்கும்.

இன்று மாலை பெய்ஜிங்கிற்குப் புறப்படுவதற்கு முன்னர், டத்தோஶ்ரீ அன்வார் பல நிறுவனங்களைச் சந்தித்து, 23 தொழில்துறை தலைவர்களுடன் ஷாங்காயில் ஒரு வட்ட மேசை அமர்வில் கலந்து கொண்டார்.

அவருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஷவ்ரூல் அப்துல் அசிஸ் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஷாங்காய் நடைபெறும் 7-வது சீன அனைத்துலக இறக்குமதி கண்காட்சி CIIE-யில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டு பிரதமர் லீ கியாங் விடுத்த அழைப்பின் பேரில், அன்வார் சீனாவுக்குப் பயணமானார்.

2009 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 15 ஆண்டுகளாக சீனா மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)