சென்னை, 14 நவம்பர் (பெர்னாமா) -- தமிழ்நாடு, சென்னையில் உள்ள அரசாங்க மருத்துவரை கத்தியால் தாக்கிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது தாய்க்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை கூறி விக்னேஷ் எனும் அந்த ஆடவர் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நேற்று சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இத்தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனைப் பணியாளர்கள் அந்த ஆடவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
கத்திகுத்தால் பாதிக்கப்பட்ட பாலாஜி எனும் அந்த மருத்துவர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
''எனது உடல் இப்போது சீராக உள்ளது. தேவையான மருத்துவ சிகிச்சைகளை இங்குள்ளவர்கள் வழங்கினர். இருதயத்தை மட்டும் பரிசோதிக்க வேண்டும். மேலும் என் உடலில் பொருத்தப்பட்டுள்ள பேஸ்மேக்கரும் முறையாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது,'' என்று பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை கண்டித்தும் அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் அரசாங்க மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)