பொது

கால்நடைகளை உட்படுத்தி அதிகமான சாலை விபத்து சம்பவங்கள் பதிவு

15/11/2024 07:21 PM

குவா மூசாங், 15 நவம்பர் (பெர்னாமா) --   விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளைச் சாலையில் சுற்றி திரிய விடாமல் இருப்பதை தடுக்க, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் அறிவிப்பு செய்யும்படி கிளந்தான், குவா மூசாங் மாவட்ட போலீஸ் அறிவுறுத்தியது. 

இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை கால்நடைகளை உட்படுத்தி சாலையில் சுமார் 159 விபத்துகள் பதிவு பெற்றிருப்பதை, குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan சிக் சூன் ஃபூ சுட்டிக்காட்டினார்.   

அதை அடிப்படையாகக் கொண்டு வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பள்ளிவாசலில் கூடியிருப்போருக்கு அந்த அறிவிப்பை வழங்குமாறு, அம்மாவட்டத்தில் இருக்கும் பள்ளிவாசல்களுக்குத் தமது தரப்பு அறிவுறுத்தியதாக அவர் கூறினார். 

இதனிடையே கடந்த பத்து மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் மாடுகளை உட்படுத்தி அதிகான சாலை விபத்துகள் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)