தார் எஸ் சலாம், 19 நவம்பர் (பெர்னாமா) -- தன்சானியாவின் வர்த்தக தலைநகரமானன தார் எஸ் சலாமில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 80 பேர் காப்பாற்றப்பட்டனர்.
கிழக்கு தார் எஸ் சலாமில் உள்ள நான்கு மாடிகள் கொண்ட அக்கட்டிடம் சனிக்கிழமை இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தில் மேலும் பலரை காணவில்லை என்பதால் தேடி மீட்கும் பணி தொடரப்பட்டு வருகின்றது.
இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கசிம் மஜாலிவா தெரிவித்திருக்கிறார்.
பலவீனமான கட்டுமானம் மற்றும் முறையற்ற அமலாக்கத்தின் காரணமாக சில ஆப்பிரிக்க நாடுகளில் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)