லண்டன், 19 நவம்பர் (பெர்னாமா) -- டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் ரோட்ரிகோ பென்டன்குர் (Rodrigo Bentancur) ஏழு ஆட்டங்களில் பங்கேற்பதற்கு இங்கிலாந்து காற்பந்து சங்கம் தடை விதித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தனது சொந்த நாடான உருகுவேயில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சக வீரர் சோன் ஹியுங்-மினுக்கு எதிராக இனவெறிக் கருத்துகள் கூறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவரது அந்த செயலுக்காக, செப்டம்பர் மாதம் பென்டான்குர் மீது வழக்கு தொடரப்பட்டு, மேலும் ஒரு லட்சம் பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது.
27 வயதான அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
ஆனால், அந்நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்து விசாரணைக்குப் பிறகு அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த தண்டனையானது இங்கிலாந்தில் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அவர் ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்க முடியும்.
யூரோபா லீக்கில் ரோமா மற்றும் ரேஞ்சர்ஸுக்கு எதிராக அவர் விளையாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் மென்செஸ்டர் சிட்டி, செல்சி மற்றும் லிவர்பூலுக்கு எதிரான போட்டிகளில் பென்டான்குர் விளையாடமாட்டார்.
இதனிடையே, பென்டான்குர் தனது இன்ஸ்டாகிராமில் சோனிடம் மன்னிப்புக் கேட்டார்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)