பொது

தியோ பெங் மரண விசாரணை; 6 மாதத்திற்குள் நிறைவு செய்ய உத்தரவு

21/11/2024 05:39 PM

கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) -- தியோ பெங் ஹோக்கின் மரணம் குறித்த விசாரணையை ஆறு மாதத்திற்குள் நிறைவு செய்யும்படி, அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம்-க்கு , கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

உயிரிழந்தவரின் பெற்றோர் செய்த சீராய்வு மனுவை அனுமதியளித்து, நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பிடிஆர்எம் மற்றும் இதர மூன்று தரப்பினரை, நான்கு பிரதிவாதிகளாக பெயரிட்டு,
2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தியோவின் பெற்றோர் மற்றும் அவரின் மனைவி தேங் சூ ஹோய்  ஆகியோர் அந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

தியோவின் மரணம் தொடர்பான விசாரணையைச் சரியான நேரத்திற்குள் முடிக்க தவறிவிட்டதோடு, 1967-ஆம் ஆண்டு போலீஸ் சட்டம் செக்‌ஷன் 20 உட்பிரிவு 3-ரை மீறியதாகவும் பிரதிவாதிகள் உறுதி ஆவணத்தை சமர்ப்பிக்கும்படியும் அவர்கள் விண்ணப்பித்தனர்.

2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சீராய்வு மனுவை பரிசீலிப்பதற்கான நீதிமன்ற அனுமதியை அவர்கள் பெற்றனர்.

முன்னதாக, 2009-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி சிலாங்கூர், ஷா அலாம் பிளாசா மாசாலாமின் ஐந்தாவது மாடியில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிடிஆர்எமின் அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க சென்றிருந்த தியோ அதே கட்டிடத்தின் 14-ஆவது மாடியில் இறந்த நிலையில் இருந்தது கண்டெடுக்கப்பட்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)