பப்பி, 21 நவம்பர் (பெர்னாமா) -- பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக்கு முக்கியத்துவம் அளித்து பாகிஸ்தானும் சீனாவும் கூட்டு இராணுவ பயிற்சியைத் தொடங்கின.
நேற்று பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் இந்த இராணுவ பயிற்சி தொடக்கம் கண்டது.
பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவங்கள் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி எனும் இடத்தில் உள்ள பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் இராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மூன்று வாரங்களுக்கு நடத்தப்படும் இப்பயிற்சியில் சீனாவைச் சேர்ந்த சுமார் 300 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக புதிய இராணுவ தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அண்மையில் அறிவித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)