கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) - சீனா பொது பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு நாட்டின் கலப்பு இரட்டையர்கள் ஹூ பாங் ரான்-செங் சூ யின் ஜோடி முன்னேறியது.
உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் மலேசிய ஜோடி உபசரணை நாட்டின் ஜியாங் ஜென் பேங்-வீ யா சின் இணையரைத் தோற்கடித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் 16-21 என்று முதல் செட்டில்தோல்வி கண்ட ஹூ பாங் ரான்-செங் சூ யின் ஜோடி, எஞ்சிய இரு செட்களை 21-14 , 21-19 என்று வென்றது.
இவ்வாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் பொது பூப்பந்து போட்டிகளில் தோல்வியடைந்த மலேசிய ஜோடி, தங்களுக்கு எதிரான ஆட்டத்தில் இன்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
அதே உற்சாகத்துடன் மற்றுமொரு கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய, டாங் ஜியே-தோ ஈ வெய் ஜோடியினர், 14-21, 23-21 மற்றும் 21-8 என்ற புள்ளிகளில் பிரான்ஸ் இணையரை வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தனர்.
இதனிடையே, ஹாங்காங் போட்டியாளர்களுடன் களம் கண்ட வோங் டியென் சி-லிம் சியூ சியென் இணையினர், எதிரணியை தோற்கடிக்க முடியாமல், 21-17, 15-21 மற்றும் 9-21 என்ற நிலையில் தோல்வி கண்டனர்.
அதேவேளையில், ஆடவர் இரட்டையர் பிரிவில், ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடி சகநாட்டவர்களுடன் போட்டியிட்டு 36 நிமிடங்களில் 21-13, 21-19 என்ற நேரடி செட்களில் வெற்றிக் கண்டது.
அதேபோல, நாட்டின் கோ ஸே ஃபெய்- நூர் இஸுடின் ரும்சானி ஜோடி, 37 நிமிடங்களில் தைவான் போட்டியாளர்களை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)