பொது

நெத்தன்யாஹுக்கு எதிரான கைது ஆணை; ஐ.சி.சி-இன் முடிவு நியாயமானது

22/11/2024 05:06 PM

புத்ராஜெயா, 22 நவம்பர் (பெர்னாமா) -- காசாவில் நடத்தப்பட்ட போர் குற்றங்களுக்காக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐசிசி-இன் முடிவு நியாயமானது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய கொடுங்கோன்மை, கொலை மற்றும் ஒடுக்குமுறை குறித்த சட்டம் மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''எனவே இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இஸ்ரேலை விட்டு வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சித்தால், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்ற நடவடிக்கைக்கு உடன்படுகிறோம்,'' என்றார் அவர்.

அந்தக் கைது ஆணைக்கு, சில ஐரோப்பிய நாடுகளும் ஆதரவாக குரல் கொடுத்திருப்பதாக பிரதமர் எடுத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)