பொது

2TM: பிடிஆர்எம் அபராத பரிசோதனை, கட்டண முகப்பில் 60 விழுக்காடு கழிவு

22/11/2024 06:03 PM

கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- 2024 பொது சேவை மறுசீரமைப்பு தேசிய மாநாட்டை முன்னிட்டு, அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம் அபராத பரிசோதனை மற்றும் கட்டண முகப்பு 60 விழுக்காடு கழிவு வழங்கியிருப்பது, 2TM ஈராண்டு மடானி திட்டத்தில் இரட்டிப்பு சிக்கன நடவடிக்கையாகி உள்ளது.

இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரையில் வழங்கப்படும் சம்பந்தப்பட்ட கழிவை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்கள் காலை மணி 8 முதலே அங்கு வரிசையில் காத்திருப்பது பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

''நான் மூத்த குடிமக்கள் என்பதால், முதியவர்களுக்கான தனி முகப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவாக ஒரு மணி நேரத்தில் கட்டணம் செலுத்த முடிந்தது. சரிபார்ப்பதும் எளிதாக இருந்தது. அபராதம் எவ்வளவு உள்ளது என்பதை சரிபார்ப்பதும் கட்டணம் செலுத்துவதும் (எளிதாக உள்ளது). கட்டணம் செலுத்த பலவகையான வழிகள் உள்ளன. கடன் பற்று அட்டையையும் பயன்படுத்தலாம்,'' என்றார்  ராஜா சின்னையா என்பவர்.

''நான் எனக்கு, நிறுவனத்திற்கு மற்றும் நண்பருக்கு கட்டணம் செலுத்தினேன். எனவே, ஒருவர் பலருக்காக செலுத்தலாம். ஒரே வேலையாக முடிந்து விடும். நேரத்தை மீதப்படுத்தலாம்,'' என்று நோர் ஹயாதி ரசாலி குறிப்பிட்டார்.

'MADANI di Hati, Rakyat Disantuni' என்ற கருப்பொருளில் காலை மணி 9 தொடங்கி மாலை மணி 6 வரை நடைபெறும் இந்த 2TM நிகழ்ச்சியில், அமைச்சு, நிறுவனம், அரசாங்கத் துறை ஆகியவற்றின், மக்களுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)