சிங்கப்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- போதைப்பொருள் விநியோகித்த குற்றச்சாட்டில் 55 வயது ஆடவர் ஒருவருக்கு சிங்கப்பூர் இன்று மரண தண்டனை விதித்தது.
இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. அறிவுறுத்தினாலும், கடந்த ஒரே வாரத்தில் போதைப் பொருள் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் மூன்று மரண தண்டனைகளை அந்நாட்டின் நீதிமன்றம் விதித்துள்ளது.
குற்றங்களைத் தடுப்பதற்கு மரண தண்டனை பங்களிக்க வில்லை என்பதால், அதனை அகற்ற வேண்டும் என்று ஐ.நா. மற்றும் மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும், ஆசியாவின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக விளங்குவதற்கு மரண தண்டனை உதவுவதாக சிங்கப்பூர் கூறுகிறது.
15 கிராம் எடைக்கு மேல் போதைப் பொருள் வைத்திருந்தால், சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாண்டு மட்டும் சிங்கப்பூரில் எட்டு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஏழு போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காகவும், ஒன்று கொலைக் குற்றத்திற்காகவும் விதிக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)