பட்டர்வெர்த், 22 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை ஆடவர் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக மியன்மார் ஆடவர் ஒருவர் இன்று பட்டர்வெர்த் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
துணைப் பதிவாளர் முஹமட் அஸ்ருல் முஹமட் சொப்ரி முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 28 வயதுடைய முஸ்தாபிஸ் எனும் அவ்வாடவர் அதனை மறுத்தார்.
நவம்பர் 16-ஆம் தேதி மாலை மணி இரண்டு அளவில் தாசேக் குளுகோர், ஜாலான் ஆரா குடா, ரெத்தினா அடுக்குமாடி குடியிருப்பின் அருகே உள்ள சாலையோரத்தில் 52 வயதுடைய எம்.குணாளனுக்கு பலத்த காயங்களை விளைவித்ததாக அவ்வாடவருக்கு எதிராக குற்றம் பதிவாகியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டுகள் வரையிலான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 325-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]