உலகம்

உணவு பாதுகாப்பின்மையை கையாள ஐ.நா நிதி கோரியது

23/11/2024 05:30 PM

லண்டன், 23 நவம்பர் (பெர்னாமா) -- உலகில் 73 நாடுகளில் 34 கோடியே 30 லட்சம் மக்களை பாதிக்கும் உலகளாவிய உணவு பாதுகாப்பின்மையை கையாள 1,690 கோடி அமெரிக்க டாலர் நிதியை, ஐ.நா சபையின் உலக உணவு திட்டம் WFP கோரியுள்ளது.

தொற்றுநோய் காலக்கட்டத்தில் ஏற்பட்ட உணவு நெருக்கடியின் இறுதி நிலையை தற்போதைய உணவு பஞ்சம் நெருங்கி வருவதாகவும் WFP எச்சரித்துள்ளது.

2025-ஆம் ஆண்டு Global Outlook-ஐ அறிமுகப்படுத்திய ஐ.நா. நிறுவனம் உலகளவிலான உணவுத் தேவை பிரச்சனைகளை தீர்வுக் காண 1,690 கோடி அமெரிக்க டாலர் நிதியை கோரியது.

சுமார் 19 லட்சம் பேர், உணவு பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக WFP குறிப்பிட்டுள்ளது.

எனினும், 2024-ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறையினால் நடவடிக்கைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பெரும்பாலும் உதவிகள் இன்றி பாதிக்கப்பட்டவர்களை விட்டு விடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

தெற்கு சூடான், ஹெய்தி மற்றும் மாலியின் சில பகுதிகள் உட்பட காசா மற்றும் சூடானில் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]