கோலாலம்பூர், 23 நவம்பர் (பெர்னாமா) -- எழுப்பப்படும் பல்வேறு பிரச்சனைகளின் மையப்புள்ளியைக் கண்டறிய மாநில அரசுகளுடன் மத்திய அரசாங்கம் எப்போதும் பேச்சுவார்த்தையை நடத்தும்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மாநிலங்களுக்கு வருகை மேற்கொள்வது, அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து, அம்மாநிலத்தில் எழும் பிரச்சனைகள் தொடர்பான விளக்கத்தைக் கேட்டறியும் முதன்மை நோக்கத்தைக் கொண்டது என்று துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூரில், 2TM கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
பிரதமரின் இந்த அணுகுமுறை, மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சரும், சபா, மற்றும் சரவாக் மாநில விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஃபாடில்லா தெளிவுப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)