புத்ராஜெயா, 25 நவம்பர் (பெர்னாமா) -- சேவையை வழங்குவதில் உருமாற்று முயற்சிகளில் ஒன்றாக அரசாங்க நிர்வகிப்பை இலக்கவியல் மயமாக்கும் மற்றும் விரைவுபடுத்தும் நடவடிக்கையாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி, ESP எனப்படும் இணையம் வழியான சிறப்பு அட்டையை குடிநுழைவுத்துறை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
1963ஆம் ஆண்டு குடிநுழைவு துறை விதிமுறைகள், 14ஆவது விதிமுறையின் அடிப்படையில் 30 நாட்களுக்கும் மேற்போகாமல் நாட்டிற்குள் நுழைவதற்கும் தங்குவதற்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஆவணமாக இந்த சிறப்பு அட்டை வெளியிடப்படவுள்ளது.
தற்போது சிறப்பு அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் குடிநுழைவுத்துறை முகப்பிற்கு வந்து தங்களின் ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை அந்நிய நாட்டவருக்கு 119,019 சிறப்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)