பொது

பூனையை துன்புறுத்திய ஆடவர் கைது

25/11/2024 07:01 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) - பூனையை துன்புறுத்திய  ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட ஆடவர் பூனையை அடித்து துன்புறுத்திய காணொளி டிக் டாக் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

அக்காணொளியில் அவ்வாடவர் ஒரு பூனையின் கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்துச் சென்று துன்புறுத்தியது தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட காணொளியின் அடிப்படையில் பிரிக்பீல்ட்ஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.10 அளவில் 43 வயதுடைய அவ்வாடவரை அவரின் வீட்டில் கைது செய்தனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 428- இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அச்சந்தேக நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ருஸ்டி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)