உலகம்

நியூசிலாந்தின் 8 வயது சிறுவர்களுக்கு இணையப் பயன்பாட்டினால் பாதிப்பு

26/11/2024 07:37 PM

வெலிங்டன், 26 நவம்பர் (பெர்னாமா-சின்ஹுவா) -- நியூ சிலாந்தில் எட்டு வயதுடைய கால் பகுதிக்கும் அதிகமான குழந்தைகள் குறைந்தது ஒரு வகையான இணையம் வழியான உள்ளடக்கத்தைப் பெற்றுள்ளனர்.

அவர்கள், பகடிவதை, நண்பர்களினால் அழுத்தம் மற்றும் பதின்ம வயதினருக்கான உள்ளடக்கம் போன்றவற்றைப் பெற்றுள்ளது வருத்தமளிப்பதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வொன்று காட்டுகிறது.

கிட்டத்தட்ட 5,000 எட்டு வயது சிறுவர்களை உள்ளடக்கிய அந்த ஆய்வு, மனோவியல், நடவடிக்கை, இலக்கவியல் மற்றும் ஊடகம் தொடர்பான அவர்களின் பெற்றோர்களின் மதிப்பீட்டையும் உள்ளடக்கியுள்ளது.

நடத்தை சிக்கல்கள் அல்லது தனிப்பட்ட சாதனங்களைக் கொண்ட குழந்தைகள் அதிகம் இணையம் தொடர்பான ஆபத்திற்கு ஆளாவதற்கான சாத்தியம் உள்ளது

அதோடு, மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகளையும் எதிர்நோக்க நேரிடும் என்று கேன்டர்பரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இணையம் வழியான ஆபத்தை அதிகரிப்பதில் விளையாட்டு சாதனங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதைத் தொடர்ந்து, கணினிகள் அல்லது மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சி போன்றவையும் இதுபோன்ற விளைவை ஏற்படுத்துகின்றன.

தனிப்பட்ட சாதனங்களை வைத்திருக்கும் குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் இவற்றைப் பயன்படுத்தினால், இணையம் வழியான ஆபத்தை எதிர்கொள்வதற்கான சாத்தியம் அதிகம்.

எனவே, சிறுவர்களின் இலக்கவியல் ஊடகப் பயன்பாட்டு நிர்வகிப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, பெற்றோர்கள் அவர்களின் தனிப்பட்ட சாதனங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதோடு கூட்டு முயற்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)