விளையாட்டு

ரூட் வான் நிஸ்டெல்ரூயை புதிய நிர்வாகியாக நியமித்துள்ளது லெய்ஸ்டர் சிட்டி

30/11/2024 06:47 PM

லெய்ஸ்டர் சிட்டி, 30 நவம்பர் (பெர்னாமா) -- தனது புதிய நிர்வாகியாக லெய்ஸ்டர் சிட்டி, ரூட் வான் நிஸ்டெல்ரூயை நியமித்துள்ளது.

ஸ்டீவ் கூப்பருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டிருக்கும் நிஸ்டெல்ரூ, 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை லெய்ஸ்டர் சிட்டியின் நிர்வாகியாக பணியாற்றுவார்.

லெய்ஸ்டர் சிட்டியின் புதிய நிர்வாகியாக ரூட் வான் நிஸ்டெல்ரூ பொறுப்பேற்கவுள்ளதை அக்கிளப் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

லெய்ஸ்டர் சிட்டியின் தொடர் பின்னடைவை தொடர்ந்து, முன்னாள் நிர்வாகி கூப்பர் நீக்கப்பட்டு, நிஸ்டெல்ரூ உடனடியாக நியமிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் நிர்வாகி எரிக் தென் ஹாக் நீக்கப்பட்டன்த் தொடர்ந்து துணை நிர்வாகியாக பணியாற்றிய நிஸ்டெல்ரூ, அக்கிளப்பிற்கு இடைக்கால நிர்வாகியாக பொறுப்பேற்றார்.

தற்போது ரூபன் அமோரிம், மென்செஸ்டரின் நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)