விளையாட்டு

ஆர்பி லைப்சிக்கை வீழ்த்தியது வூல்ஸ்பெர்க்

01/12/2024 04:13 PM

லைப்சிக், 01 டிசம்பர் (பெர்னாமா) -- பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.

சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வூல்ஸ்பெர்க், ஆர்பி லைப்சிக்கை 5-1 என்ற கோல்களில் தோற்கடித்தது.

சொந்த அரங்கில் விளையாடினாலும் இவ்வாட்டம் ஆர்பி லைப்சிக் அணிக்கு சாதகாமாக அமையவில்லை.

ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்த வூல்ஸ்பெர்க், அடுத்த ஒரு நிமிடத்திற்குள் இரண்டாவது கோலைப் போட்டு முன்னணி வகித்தது.

முதல் பாதி ஆட்டம் முடிவடைவதற்குள் வூல்ஸ்பெர்க் மூன்றாவது கோலையும் அடித்ததால் ஆர்பி லைப்சிக் வலுவிழந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தையும் ஆக்கிரமித்த வூல்ஸ்பெர்க் 64வது நிமிடத்தில் தனது கோல் எண்ணிக்கையைக் கூட்டியது.

ஆர்பி லைப்சிக்கின் ஒரே ஆறுதல் கோல் 82வது நிமிடத்தில் போடப்பட்டது.

கூடுதல் நிமிடத்தில் ஐந்தாவது கோலை அடித்து இப்பருவத்தின் மிகப் பெரிய வெற்றியை வூல்ஸ்பெர்க் பதிவு செய்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)