உலகம்

வியட்நாமின் பெண் தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிலைநிறுத்தம்

04/12/2024 06:48 PM

ஹோ சி மின் சிட்டி , 04 டிசம்பர் (பெர்னாமா) -- 1200 கோடி டாலர் மோசடி வழக்கில், வியட்நாமை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை நீதிமன்றம் நிலைநிறுத்தியது.

வியட்நாமின் மிகப்பெரிய நிதி மோசடியாக கருதப்படும் வழக்கில், ட்ரூவாங் மை லான் எனும் அப்பெண்னுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அத்தண்டனையை மறுபரிசீலனை செய்ய, அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், அவரின் மரண தண்டனையை குறைக்க எந்த அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lan மோசடி செய்த பணத்தில் 75 விழுக்காட்டை திருப்பித் தர முடிந்தால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம் என்று அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)