பெனாம்பாங், 04 டிசம்பர் (பெர்னாமா) -- நேற்றிரவு, சபா,பெனாம்பாங், பெவர்லி ஹில்ஸ்சில் போலீசாருடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி ஏந்திய மூன்று குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட அம்மூன்று ஆடவர்களும், கொலை உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக, சபா மாநில குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ அஸ்மி அப்துல் ராஹிம் தெரிவித்தார்.
D9 சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று வழங்கிய தகவலின் அடிப்படையில், தமது தரப்பு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிரடி சோதனையை மேற்கொண்டதாக டத்தோ அஸ்மி அப்துல் ராஹிம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் அம்மூன்று ஆடவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சரவாக்கில் கொலை வழக்கு உட்பட, இன்னும் பல குற்றச்செயல்களில் அவர்கள் மூவரும் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் அது தொடர்பிலான தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஸ்மி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)