ஆன்ஃபீல்ட், 04 டிசம்பர் (பெர்னாமா) -- லிவர்பூல் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் முகமட் சாலாவின் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகின்றது.
இந்நிலையில் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்-பி.எஸ்.ஜி கிளப்பில் அவர் இணையப் போவதாக வெளியாகியிருக்கும் தகவலை அக்கிளப்பின் தலைவர் நாசர் அல் கலிஃபி மறுத்துள்ளார்.
இந்த பருவத்தின் இறுதியில், லிவர்பூல் கிளப் உடனான முகமட் சாலாவின் ஒப்பந்தம் முடிவடையவுள்ளது.
ஆனால், அதனை நீட்டிப்பதற்கான விண்ணப்பத்தை அவர் இன்னும் பெறாமல் இருக்கின்றார்.
இப்பருவம் முழுவதும் முகமட் சாலா மிகச் சிறந்த ஆட்டத்தை அக்கிளப்பில் வெளிப்படுத்தி வருகின்றார்.
ஆயினும், தமது விண்ணப்பம் குறித்து, எவ்வித பேச்சு வார்த்தையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது தமக்கு நெருடலை ஏற்படுத்தி இருப்பதாக அண்மையில் சாலா ஒரு நேர்க்காணலில் கூறியிருந்தார்.
அந்த நேர்காணலுக்குப் பிறகு 32 வயது சாலாவின் எதிர்காலம் பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)