பாங்கி, 16 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசியாவின் செம்பனை எண்ணெய் மற்றும் செம்பனை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி கடந்த மாத வரை 125 கோடி ரிங்கிட் அதிகரித்து 993 கோடி ரிங்கிட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வரை, இந்தியாவுக்கே அதிகமாக செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 29 லட்சம் டன் செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த ஏற்றுமதியில் அதன் எண்ணிக்கை 18.5 விழுக்காடு ஆகும்.
சீனாவுக்கு (13 லட்சம் டன்), ஐரோப்பிய ஒன்றியம் (1.2 லட்சம் டன்) கென்யா (1.1 லட்சம் டன்), துருக்கி (832,000 டன்), பிலிப்பைன்ஸ் (611,000 டன்) மற்றும் ஜப்பான் (553,000 டன்) செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஜொஹாரி குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் இந்த ஏழு நாடுகளுக்குச் செய்யப்பட்ட செம்பனை எண்ணெய் ஏற்றுமதி 54.4 விழுக்காடு ஆகும் என்று அவர் விளக்கினார்.
இன்று கோலாலம்பூரில், மலேசிய செம்பனை எண்ணெய் வாரியம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஜொஹாரி அந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)