Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

170 கோடி ரிங்கிட் ஓய்வூதியச் சரிசெய்தல் உத்தரவு; மேல்முறையீட்டில் அரசாங்கம் வெற்றி

09/03/2026 04:34 PM

புத்ராஜெயா, 09 மார்ச் (பெர்னாமா) --  2016-ஆம் ஆண்டு பொது சேவை துறை சுற்றறிக்கையின் படி, 531,976 ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு அவர்களின் இறுதி ஊதியத்தின் அடிப்படையில் 170 கோடி ரிங்கிட் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி செய்த மேல்முறையீட்டில் அரசாங்கம் இன்று வெற்றி பெற்றது.

வெளியுறவு அமைச்சின் அரசாங்க ஊழியராக ஓய்வு பெற்ற அமினா அஹ்மாட் பதிவு செய்த நீதித்துறை சீராய்வு விண்ணப்பத்தில் டத்தோ லிம் சொங் ஃபொங், டத்தோ அசஹாரி கமால் ரம்லி மற்றும் டத்தோ மியொர் ஹஷ்மினி அப்துல் ஹமிட் ஆகிய மூவர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இம்முடிவை எடுத்தது.

ஏகமனதாக வழங்கப்பட்ட அம்முடிவில், 2017-ஆம் ஆண்டில் அமினாவின் முதல் சட்ட நடவடிக்கை, ஓ.எஸ் தொடர்பில் ஓய்வூதிய ஒருங்கிணைப்புப் பிரச்சனை 2022-ஆம் ஆண்டிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்டதாக டத்தோ அசஹாரி கூறினார்.

இன்றைய முடிவைத் தொடர்ந்து, இனி சம்பந்தப்பட்ட அந்த ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு அரசாங்கம் அத்தொகையைச் செலுத்த வேண்டியதில்லை.

2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, அமினா தனது சொந்த ஆற்றலின் அடிப்படையில் 56 பொது சேவை துறை ஓய்வு பெற்றவர்கள் சார்பாக நீதித்துறை சீராய்வு விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

2017-ஆம் ஆண்டு ஓய்வூதியத் திட்டத்தில் முக்கியப் பிரச்சனைகளாக இருந்த அமினாவின் ஓய்வூதியத் தகுதி மற்றும் நிலுவைத் தொகைக்கான அவரின் உரிமைகள் ஆகியவற்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அசஹாரி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)