கோலாலம்பூர், 17 டிசம்பர் (பெர்னாமா) -- பயிற்சி, தொழில் மற்றும் முதலீட்டு அம்சங்களில் ஆக்கப்பூர்வ வியூகத்தை வகுப்பதற்கான வழிகாட்டியாக, ''மலேசியாவில் பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் மற்றும் பசுமை பொருளாதாரத் தாக்கம் தொடர்பான ஆய்வு'' அறிக்கையை அரசாங்கம் பயன்படுத்தவிருக்கிறது.
இன்றையக் காலக்கட்டத்தில் பட்டதாரிகள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ-இன் தாக்கத்தினல் வேலையைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவதை அரசாங்கம் அறிந்துள்ளதால் இந்த அறிக்கை அவசியம் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
''இந்த அறிக்கை அரசாங்கக் கொள்கைகளை இயற்றுபவர்கள் மற்றும் தனியார் நிறுவனம் மட்டுமின்றி, பொதுவாகவே தொழிலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் வழிகாட்டியாகும். நம் நாட்டில் வேலை சந்தையில் 21ஆவது நூற்றாண்டில் பொருளாதார தாக்கத்தை ஆராய இது அவசியம்,'' என்றார் அவர்.
இன்று, மேலவையில் கேள்வி பதில் நேரத்தின்போது ஸ்டீவன் சிம் அவ்வாறு குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டணம் உள்ள தொழில்துறை பயிற்சி வாய்ப்பை வழங்குவதற்கு, முதலாளிகளை ஊக்குவிக்க அமைச்சு மூன்று முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)