கோலாலம்பூர், 20 டிசம்பர் (பெர்னாமா) - தேசிய பூப்பந்து கலப்பு இரட்டையர் செங் சூ இன், அடுத்த ஆண்டு ஜனவரி 7 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் 2025 மலேசிய பொது பூப்பந்து போட்டியில் அறிமுகமாக உள்ளார்.
ஹோ பாங் ரோனுடன் கைக்கோர்க்கும் அவர், சொந்த ஆதரவாளர்கள் முன்னிலையில் விளையாடுவது சற்று பதற்றமாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.
"அடுத்த ஆண்டு நன்றாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். நாங்கள் அந்த அளவில் இருக்கிறோம். எங்களின் ஆட்டத்தை அதிகமானோர் ஆய்வு செய்வர். இதை (சிறந்த விளையாட்டு அடைவு நிலை) தொடர வேண்டும்," என்றார் அவர்.
2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி பாங் ரோன் சூ இன் ஜோடி ஒன்றாக விளையாடி வருகிறது.
உலகத் தர வரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் அந்த ஜோடி கடந்த நவம்பர் மாதம் சீன மாஸ்டர்ஸ் போட்டியில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது.
அடுத்த பருவத்தில், உலகின் சிறந்த 10 இடங்களில் இடம் பெற எண்ணம் கொண்டிருப்பதாக சூ இன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)